திடீர் திருப்பம் – நேற்று தொற்று உறுதி; இன்று தொற்று இல்லை!

கொழும்பில் பண்டாரநாயக்கபுர மற்றும் கொலன்னாவையை சேர்ந்த இருவர் மற்றும் தேசிய வைத்தியாசாலை தாதி ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இன்று (6) பரிசாேதனை முடிவு கிடைத்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இரண்டாம் கட்டமாக செய்யப்பட்ட பரிசோதனை முடிவிலேயே அவர்களுக்கு தொற்று இல்லை (Negative) என்ற பெறுபேறு கிடைத்துள்ளது.

எனினும் நேற்று அவர்களுக்கு செய்யப்பட்ட முதலாம் கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளது (Positive) என்ற பெறுபேறு கிடைத்திருந்தது.

இதனால் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இருப்பினும் மாறி மாறி பெறுபேறுகள் கிடைப்பதும் தற்போது குழப்பகரமாகியுள்ளது.