நால்வருக்கு கொரோனா தொற்றியதில் குழப்பம்

கொழும்பில் நேற்று (5) கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளிகள் நால்வருக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என்பதை கண்டறிவதில் முதல் முறையாக சிக்கல் எழுந்துள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும்,

எனினும் இன்றைய தினத்துக்குள் அதனை அதிகாரிகள் கண்டறிவார்கள் என்று நம்பிக்கையுள்ளது.

பண்டாரநாயக்கபுர, முகத்துவாரம், கொலன்னாவை மற்றும் தேசிய வைத்தியசாலை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட நால்வருக்கே எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குழப்பமாக உள்ளது – என்றும் தெரிவித்துள்ளார்.