ஹெரோயினுடன் கணவன், மனைவி கைது

தலங்கம பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹீனட்டிகும்புற பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 500 கிராம் ஹெரோயினுடன் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த பெண் நோனாகம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என்பதோடு , அவரது கணவன் அம்பலாந்தொட்ட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவராவார். குறித்த சந்தேகநபர்கள் இருவரும் ஹெரோயின் விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

டுபாயில் வசிப்பதாக சந்தேகிக்கப்படும் களுசாகர மற்றும் அவருடன் வாழும் முத்து என்ற பெண் ஆகியோரே இதன் பின்னணியில் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது. தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.