கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதாக தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பரவும் தன்மையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதியான சான்றுகள் கிடைத்திருப்பதாக லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓர் அறைக்குள் இருக்கும்போது வைரஸ் அதிகம் பரவுவதில்லை என்றும் பொதுவெளியிலேயே காற்றில் அதிகமாக வைரஸ் பரவுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதனை கருத்திற்கொண்டு புதிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com