இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்!

 எதிர்வரும் மே மாதம் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் லிட்ரோ காஸ் 700 ரூபாவாலும், லாப்ஸ் காஸ் 650 ரூபாவாலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அத்தோடு சிலிண்டர் விலை 200 ரூபா வரை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டாலும், பல பகுதிகளில் விலை இப்போதே அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் தற்போது விற்பனையாகின்ற காஸ் விலை 1540 ரூபாயில் இருந்து 2240 ரூபா வரை உயரும் என தெரிவிக்கப்படுகிறது.