இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு இலட்சம் ஆமைகள் இறப்புக்கு காரணமென்ன?

இலங்கையின் கடலோரப் பகுதியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிவதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 100,000 க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒரு கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமும் ஒரு மில்லியன் லஞ்ச் ஷீற்கள் சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றப்படுவதாகவும், 10 மில்லியனுக்கும் அதிகமான ஷொப்பிங் பைகள் குப்பைகளில் சேர்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஷொப்பிங் பைகள் சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன என்றும் பண்டிகை காலங்களில், ஷொப்பிங் பைகளின் பயன்பாடு விரைவான அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.