பயத்தில் கடலில் குதித்தவர் மரணம்!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவு பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரை பொலிஸார் என நினைத்து தப்பிக்க கடலில் பாய்ந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கிண்ணியா சோலை வெட்டுவான் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

யுனைதீன் பாஹீம் (வயது -21) என்னும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று இரவு (5) அதே நீரேந்து பகுதியில் சடலமாக மீட்கப்பட்டு, மதீனா நகர் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.