கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 346பேர் பாதிக்கப்பட்டதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11 இலட்சத்து ஆறாயிரத்து 062பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 541பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 85ஆயிரத்து 319பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,089பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை ஒன்பது இலட்சத்து 97ஆயிரத்து 2024பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.