நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவையாளராக திகழந்த நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “நடிகர் விவேக்கின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

தமிழ் திரையுலகில் 30 வருட காலங்களுக்கு மேலாக தனது ஆளுமையினால் மக்களிடத்தில் சிறந்து விளங்கிய ஒருவராவார்.

அத்துடன் சமூக சேவைகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அவரது நகைச்சுவை மக்களை சந்தோசப்படுத்தியது மாத்திரமின்றி சிந்திக்கவும் வைத்தது.

அத்தகைய ஒருவரின் மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரது இடத்தினை எவராலும் பூர்த்தி செய்ய முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.