‘கோஸ்டி’ யாக பயமுறுத்தும் காஜல் அகர்வால்!

முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ஹாரர் கொமடி படமாக தயாராகியிருக்கும் ‘கோஸ்டி’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட் ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கோஸ்டி’.

இதில் முன்னணி நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் மூத்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான கேஎஸ் ரவிக்குமார், சுரேஷ் மேனன், லிவிங்ஸ்டன், மனோபாலா, நடிகர்கள் ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சத்யன், நடிகை ஊர்வசி உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் பொலிசாகவும், பேயாகவும் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகில் பேய்களையும், ஆவிகளையும் வைத்து யார் ஆகும் ஹாரர் கொமடி படங்களுக்கு என்றைக்கும் வரவேற்பு இருப்பதால், ‘கோஸ்டி’ படத்திற்கும் பாரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கோஸ்டி: படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அமைச்சராக பதவி ஏற்கும் அரசியல்வாதிகளின் குழு புகைப்படம் போல் அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு இணையத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லைக்குகளும், கமெண்டுகளும் கிடைத்து வருகிறது.