சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்ட கிரவல் ; கிராம அலுவலரின் மனைவி கைது!

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ள போதும் இதற்கு எதிராக திணைக்களங்கள் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படடிருந்தது.

இந்நிலையில் களத்தில் குதித்த ஒட்டுசுட்டான் பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக அகழ்ந்து  குவிக்கப்பட்டிருந்த  சுமார் 750 டிப்பர் லோட் கிரவலை தமது ஆளுகையின் கீழ் கொண்டுவந்ததுடன்  குறித்த காணிக்கு உரிமை கோரிய கிராம அலுவலரின் மனைவியையும் கைது  செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ள போதும் இதற்கு எதிராக திணைக்களங்கள் எதுவும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படடிருந்தது

இந்நிலையில்  இன்று மாலை சம்பவ இடத்திற்குச் சென்ற ஒட்டுசுட்டான் பொலிசார் குறித்த கிரவல் குவித்து வைக்கப்பட்டிருந்த இடங்களை பார்வையிட்டதோடு குறித்த இடம் தொடர்பிலும் இங்கு கிரவல்  யார்  அகழ்ந்தது  என்பது தொடர்பிலும்  விசாரணைகளை முன்னெடுத்தனர் இதன்போது குறித்த பகுதியில் கிராம அலுவலர் ஒருவரே  குறித்த கிரவல் அகழ்வை மேற்கொண்டதாக  அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில்  குறித்த பகுதி கிராம அலுவலர் மற்றும் கிரவல் அகழ்வில் ஈடுபட்ட கிராம அலுவலர் ஆகியோரை பொலிசார் சம்பவ இடத்திற்கு அழைத்து இருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கருவேலங்கண்டல் கிராம அலுவலர் பிரிவின்  கிராம அலுவலர் அவர்கள் குறித்த காணி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் அவ்வாறான நிலையிலேயே குறித்த காணியில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் குறித்த அகழ்வில் ஈடுபட்ட கிராம அலுவலருடைய மனைவியினுடைய தந்தையின் காணி எனவும்   தந்தையார் மகளுக்கு அதாவது கிரவல்  அகழ்வில் ஈடுபட்ட கிராம அலுவலரின்  மனைவிக்கு வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட போதும் குறித்த காணிக்கான ஆவணங்கள் இல்லை எனவும் குறித்த காணி ஆவணத்துக்கு  பிரதேசத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டிருப்பதாகவும் குறித்த கிரவல்  அகழ்வுக்கு  அனுமதி பெறப்படவில்லை என்பது தொடர்பிலும் பொலிசாருக்கு தெரிவித்தார்.

இந் நிலையில் குறித்த காணியின் உரிமையாளரான  கிராம அலுவலருடைய   மனைவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் இந்த அகழ்வு  நடவடிக்கைக்காக எந்தவிதமான ஒரு அனுமதியையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறித்த காணியை விவசாய தேவைக்காக சுத்தம் செய்வதற்காக பிரதேச செயலகத்திற்கு செய்யப்பட்ட விண்ணப்பம் ஒன்றின்  பிரதியை மாத்திரம் காட்டிய நிலையில் குறித்த அகழ்வு மற்றும் களஞ்சியப்படுத்தல்  சட்டத்திற்கு புறம்பாக செய்யப்பட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த கிராம அலுவலருடைய மனைவி தற்போது ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் அழைத்துவரப்பட்டு ஒட்டுசுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com