தலைமன்னார் – தனுஷ்கோடிக்கு இடையேயான கடற்பரப்பை நீந்திக் கடந்த இரண்டாவது வீரர்!

தலைமன்னார் – தனுஷ்கோடிக்கிடையிலான பாக்கு நீரிணை வெற்றிகரமாக நீந்திக் கடந்த கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர பெற்றுள்ளார்.

அதன்படி ரோஷன் அபேசுந்தர 28 மணிநேரம் மற்றும் 19 நிமிடம் 43 வினாடிகளில் பாக்கு நீரிணை  59.3 கி.மீ தூரரம் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். 

இந் நிலையில் அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.