நிலத்தடி வெள்ளத்தில் சிக்கியுள்ள 21 சீன சுரங்கத் தொழிலாளர்கள்!

சீனாவின் வடமேற்கில் நிலத்தடி வெள்ளத்தால் சிக்கிய 21 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந் நாட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சின்ஜியாங் பிராந்தியத்தில் ஹுட்டுபி மாவட்டத்தில் உள்ள சுரங்கம் ஒன்றே சனிக்கிழமை மாலை 6:10 மணியளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அதிலிருந்து எட்டுப் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சீனாவின் நிலக்கரிச் சுரங்கங்கள் உலகின் மிக மோசமானவையாகும், தொடர்ந்து வெடிப்புகள் மற்றும் எரிவாயு கசிவுகளால் பாதிக்கப்படுகின்றன