
ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டு சுயாதீன ஊடகங்கள் மற்றும் பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உயிரிழப்புகளைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
நாட்டின் மிகப் பெரிய நகரமான யாங்கோனில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மார்ச் 14 பின்னர் பாகோவில் புதிய இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
82 பேரின் இறப்பு எண்ணிக்கை அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தால் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த சங்கம் பெப்ரவரி 1 ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர் ஏற்பட்ட தாக்குதலில் இருந்து தினசரி உயிரிழப்புகள் மற்றும் கைதுகளை வெளியிடுகிறது.
அதேநேரம் மியான்மர் நவ் செய்தித்தளமும் 82 பேர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது.