கனடாவில் 30 நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி!

கனடாவில் 30 நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளார்.

ரொறன்ரோவை சேர்ந்த 15 வயதான சிறுமி தெரசா பெலிசியா பிரவுன்.

இவர் கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

பிரவுன் கடைசியாக அன்றைய தினம் மாலை 4.35 மணியளவில் கிங்ஸ்டன் சாலையில் காணப்பட்டிருக்கிறார்.

பெலிசியா பிரவுன் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார்.

அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் எனவும் பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.