சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஒரு வருட சிறை: தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பினை வழங்கியுள்ளது. காசோலை மோசடி தொடர்பாகவே குறித்த இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ரேடியன்ற் நிறுவனத்திடம் பணம் பெற்று அதனை திரும்பச் செலுத்தாமை தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ப்பட்டது.

இதன்படி, சரத்குமார் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டடோது, ராதிகா சரத்குமார் மீது இரண்டு வழக்குகள்  தொடரப்பட்டன.

இந்நிலையில், குறித்த வழக்குகளின் விசாரணையில் குற்றவாளிகளாக் கண்டறியப்பட்டுள்ள சரத்குமார், ராதிகா மற்றும் மஜிக் ப்ரேம் நிறுவனத்தின் பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபன் ஆகியோருக்கு நீதிமன்றம் இவ்வாறு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.