டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்படி ஏப்ரல் 30 திகதி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 98 ஆயிரத்திற்கும் மேறபட்டோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தலைநகர் டெல்லியிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிபடியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.