பாதுகாப்பைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கனேடியர்களுக்கு தெரசா டாம் அறிவுறுத்தல்!

தம் பாதுகாப்பைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கனேடியர்களுக்கு கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘கனடியர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், கவலைக்குரிய மாறுபாடுகள் எங்கும் இருக்கலாம்.

நாம் அனைவரும் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம் பாதுகாப்பைத் தக்க வைத்துக் கொள்ளுவோம்’ என பதிவிட்டுள்ளார்.

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 342பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து மூவாயிரத்து 988பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 62பேர் உயிரிழந்துள்ளனர்.