நிறைவுக்கு வரும் அசாம் தேர்தல்!

அசாம் மாநிலத்திற்கான இறுதிகட்ட தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் இறுதி கட்டமாக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்போது 78 இலட்சத்து 75 ஆயிரத்து 468 பேர் வாக்களிக்கவுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதியாக சில பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பயங்கரவாதிகளின் பாதிப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிற 7 பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.