உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்குத் தடை!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த வர்த்தமானி அறிவிப்பு இன்று இரவுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாம் எண்ணெய்க் கொள்கலன்களை விடுவிக்க வேண்டாம் என சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பாம் எண்ணெய்யை உற்பத்திசெய்யும் செம்பனை மரங்களைக் கட்டங்கட்டமாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com