தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 1950 என்ற இலக்கத்தை பயன்படுத்தி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது தொலைபேசிகளை கொண்டு செல்லக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்குச்சாவடிகளில் வெப்கெமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாக்குப்பதிவை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.