யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மதுவரித் திணைக்களத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நேற்று மாலை முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் ஒரு கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி சுமார் ஒரு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com