
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு ஆறுதலளிக்கும் வகையில் குறைந்துள்ள நிலையில் பண்டிகைக் காலங்களில் மக்களை மிக மிக அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமகால நிலமைகள் குறித்து இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
மாவட்டத்தில் 3329 பேர் தனிமைப்படுத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபார் மாதத்தின் பின்னர் 807 தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து 1220 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 469 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
இதேபோல் யாழ்.மாவட்டத்தில் ஒரு சில நாட்களில் சடுதியாக அதிகரித்த கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு ஆறுதலளிக்கும் வகையில் குறைந்திருக்கின்றது.
அதனை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பண்டிகை காலத்தில் தேவையற்ற நடமாட்டத்தை தவிர்க்குமாறும் கேட்டுள்ளார்.
