கனடாவில் பரவும் மர்மமான மூளை நோய் – எப்படி ஏற்படுகிறது என கண்டறிய முடியாமல் திணறும் விஞ்ஞானிகள்

கனடாவில் Creutzfeldt-Jakob நோய் போல் இருக்கும் மர்மமான மூளை நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, New Brunswick பகுதியில் 43 பேர் மர்மமான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து வருவதாக கனடா அதிகாரிகள் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2015-ல் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டார் என்றாலும் சமீபத்திய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2020-ல் 24 பேரும், இந்த ஆண்டு இதுவரை 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர்.

இது Creutzfeldt-Jakob நோய் என முதலில் மருத்துவர்கள் சந்தேகித்த நிலையில், தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதற்கான ஆதராங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

மர்மமான மூளை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வலி, பிடிப்பு, அறிவாற்றல் வீழ்ச்சி, தசை விரயம் மற்றும் பற்கள் நடுங்குவது என படிப்படியாக மோசமான அறிகுறிகளை காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட் பெரும்பாலானோர் வடகிழக்கு நியூ பிரன்சுவிக்கில் உள்ள அகாடியன் தீபகற்பத்திலும், தென்கிழக்கு நியூ பிரன்சுவிக் நகரில் உள்ள மோன்க்டனுக்கு அருகிலும் உள்ளனர்.

இந்த நோய்க்கான காரணத்தை அடையாளம் காண பல ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உட்பட்டிருப்பதால், இந்த நோய் சுற்றுச்சூழல் நச்சுகளான B-methylamino-L-alanine (BMAA) மற்றும் டோமோயிக் அமிலம் போன்றவற்றால் ஏற்படக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஒரு வாரத்தில் அல்லது அது ஒரு வருடத்தில் எங்களுக்கு காரணம் தெரியக்கூடும் என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டாக்டர் Neil Cashman குறிப்பிட்டார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com