திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை திகதியை மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

36.5 மில்லியன் ரூபாய் திவிநெகும நிதியை பயன்படுத்தி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, பஞ்சாங்கம் மற்றும் ஜி.ஐ. குழாய் விநியோகித்தமை தொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அந்தவகையில் குறித்த வழக்கு விசாரணை செப்டம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com