தமிழக தேர்தல் களம் : பழனிசாமி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு,க தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர்  இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரம், வியூகம் என தீவிர கள பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ஆம் திகதி தொடங்கியது.

அதிமுக சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகலில் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

அதன் பின்னர் தமது தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, ஜலகண்டபுரம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி நகராட்சி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com