இதய துடிப்பை சீராக்க உதவும் நவீன கருவி

எம்முடைய இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டும். இயல்பான அளவைவிட குறைந்தாலும் அல்லது அதிகரித்தாலும் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க பேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தப்படும். தற்போது இதில் மேம்படுத்தப்பட்ட பேஸ்மேக்கர் கருவி ( Leedless Pacemaker)  அறிமுகமாகியிருக்கிறது.

ஒவ்வொருவரின் இதயமும் நிமிடத்திற்கு தோராயமாக 72 முறை துடிக்கிறது. பலருக்கு பல்வேறு காரணங்களால் இயல்பான இதயத்துடிப்பு ஏற்படாமல் குறைவாகவோ அல்லது மிகையாகவோ துடிக்கும். இந்நிலையில் இதயத்துடிப்பு 60 முறைக்கு கீழாக இருந்தால், அதனை Bradycardia என்றும், 100 முறைக்கு மேல் துடித்தால் அதனை  Tachycardia என்றும் மருத்துவ மொழியில் குறிப்பிடுவார்கள். இதய துடிப்பில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை இசிஜி பரிசோதனையில் துல்லியமாக அவதானிக்க இயலும்.

இதனைத்தொடர்ந்து இத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராம், டிரெட்மில், ஹோல்டர் மானிட்டர் டெஸ்ட் ஆகிய பரிசோதனைகளை செய்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். அதனைத் தொடர்ந்து இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தி கொள்ள பரிந்துரை செய்வார்கள்.

தற்போது பேஸ்மேக்கர் கருவிகளில் வயர்லெஸ் பேஸ்மேக்கர் கருவி அதாவது Leadless Pacemaker என்ற கருவி அறிமுகமாகி இருக்கிறது.

இந்த கருவியுடன் வயர்கள் இல்லாததும், மிகக் குறைவான எடையைக் கொண்டிருப்பதும், இதன் சாதகமான அம்சங்கள் என்பதால் இதற்கு நோயாளிகளிடத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. சத்திர சிகிச்சையற்ற முறையில் இத்தகைய கருவி எளிதாக இதயப்பகுதியில் பொருத்தப்படுத்தப்படுவதால் கூடுதல் பலன்கள் கிடைக்கிறது என மருத்துவ நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.

இதயத்துடிப்பு சமச்சீரற்ற தன்மையில் இருப்பவர்கள், அதனை அலட்சியப்படுத்தி புறக்கணித்தால் மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

டொக்டர் துர்கா தேவி

அனுஷா 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com