மத்ரஸா பாடசாலைகளை தடைசெய்ய தீர்மானம் – சரத் வீரசேகர

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடை செய்யும் அமைச்சரவை யோசனைக்கு கைச்சாத்திட்டுள்ளேன்.

ஒரு தரப்பினரது  அடையாளங்களை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொது கொள்கைக்கு முரணான வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மத்ரஸா பாடசாலைகளை தடை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைவாத கொள்கைகள் தோற்றம் பெறும் நிறுவனங்கள், அமைப்புக்கள் தொடர்ந்து செயற்பட ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

களூத்துறை ஸ்ரீ முனசிங்க போதிராஜ விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தகுதி பெற்றுள்ள 209 பிரதான பொலிஸ் பரிசோதகர்கர்களை உதவி பொலிஸ் அதிகாரிகளாக தரமுயர்த்தும் நேர்முக பரீட்சையை இம்மாத இறுதியில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவையில் காணப்படும் குறைப்பாடுகளுக்கு தீர்வு காண விசேட பொறிமுறையை வகுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவையினை வினைத்திறனான முறையில் முன்னெடுத்து செல்ல எதிர்பார்க்கப்பட்டுள்ளது.பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அமைதியான சூழலை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். இதன் காரணமாகவே பொது மக்கள் பாதுகாப்புக்கு  என பிரத்தியேகமான அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவையில் நீண்ட காலம் சேவையில் இருந்தவர்கள் பதவி உயர்த்தப்படாமல் இருப்பது பொலிஸ் சேவையில் பிரதான குறைப்பாடாக கருதப்படும்.

இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலங்களில் பல நெருக்கடிகளை ஏற்படுததியுள்ளது. தகுதிப்பெற்றுள்ள 209  பிரதான பொஸிஸ் பரிசோதகர்களை உதவி பொலிஸ் அதிகாரிகளாக தரமுயர்த்தும் நேர்முக பரீட்சையை இம்மாத இறுதியில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவையில் காணப்படும் குறைப்பாடுகளுக்கு துரிதமாக தீர்வை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். பொது மக்களின் பாதுகாப்பு விவகாரத்தில் பொலிஸ் சேவையின் பங்களிப்பு பிரதானமானதாகும்.குறைப்பாடுகளுக்கு தீர்வு காண விசேட பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்க அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை  தடை  செய்யும் அமைச்சரவை யோசனைக்கு கைச்சாத்திட்டுள்ளேன். ஒரு  மதத்தில் அடையாளங்களை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

அத்துடன் பொது கொள்கைக்கு முரணான வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மத்ரஸா பாடசாலைகளை தடை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அடிப்படைவாத கொள்கைகள் தோற்றம் பெறும் நிறுவனங்கள், அமைப்புக்கள் தொடர்ந்து செயற்பட ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com