தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் விடுதலை சிறுத்தைகள்!

தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளை கேட்டுள்ளதுடன் 25 விருப்பத் தொகுதிகளையும் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்துள்ளன.

காங்கிரஸ் கட்சியிடம் மட்டுமே தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஏனைய கட்சிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும், மறைமுகமாக பேசி வருகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே தங்கள் சின்னத்தில் நிற்கவும் மற்ற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார். இதேவேளை, 10 தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுள்ள போதும் எட்டு தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com