ஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஸ்ரீலங்கா அரசாங்கம், அரசியலில் ஸ்திரத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பேணும் என்று சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நட்பு நாடான ஸ்ரீலங்காவானது அரசியல் ஸ்திரத்தன்மை, தேசிய ஒற்றுமையை பேணும் என்றும், அந்த நாடு தேசிய வளர்ச்சியில் அதிக சாதனைகளை செய்யும் என்றும் சீனா உண்மையிலேயே நம்புகிறது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் குறிப்பிட்டிருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இக்கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை சீனா பாராட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான முயற்சிகளில் உள் விவகாரங்களில் தலையிடும் மற்றும் அரசியல் அழுத்தத்தை செலுத்தும் நகர்வுகளை ஸ்ரீலங்கா அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.