இலங்கையில் கறுப்புஞாயிறு – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவிதது கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இதன்படி இலங்கையில் எதிர்வரும் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி இவ்வாறு கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.