சாலையில் வைத்து இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து கொலை!

பிரபல ரவுடி நித்தியானந்தன் சாலையில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ரங்காபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தன்(34). சிறுவயதில் இருந்தே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி பிரபலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நித்தியானந்தன் சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பே வெளியே வந்திருந்தார்.

மோட்டார் சைக்கிளில் பாணாவரம் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக புதன்கிழமை மாலை 5 மணியளவில் நித்தியானந்தன் சென்றுள்ளார். அப்போது எதிரே காரில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் நித்தியானந்தன் மீது மோதி அவரை நிலை குலையச் செய்து கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கியுள்ளது.

அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய நித்தியானந்தனை துரத்திய கும்பல், அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டுத் தப்பியோடி விட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாணாவரம் பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு பிளேடு நித்யா, என்று அழைக்கப்படும் நித்தியானந்தன் ரங்காபுரம் டாஸ்மாக் பாரில் மது அருந்திக விட்டு அருகே அமர்ந்து அருந்திக் கொண்டிருந்த நிஷாந்த் உடன் மதுபோதையில் சண்டையிட்டுள்ளார்.

அந்தத் தகராறு வாக்குவாதமாக மாறி அடிதடியில் முடிந்தது. அதற்குப் பழி தீர்க்கும் விதத்தில், நிஷாந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து நித்யானந்தனை படுகொலை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து நிஷாந்த்(33), வினோத்குமார்(32), பிரதீப்(21), சேட்டு (26)ஆகிய 4 பேரையும் பொலிசார் கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.