ரொறன்ரோவில் மாயமான 14 வயது சிறுமி!

கனடாவில் 14 வயதான சிறுமி காணாமல் போன நிலையில் தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ரொறன்ரோவை சேர்ந்தவர் கரோலினா ஹெர்னாண்டஸ் (14) என்பவரே கடந்த 22ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் Keele St + Calvington Dr பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

இதன்பின்னர் கரோலினா மாயமாகியிருக்கிறார்.

4 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட கரோலினா காணாமல் போன போது நீல நிற கோர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார் என பொலிசார் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சிறுமி கரோலினா தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.