வட கொரியாவில் கொடூரம்!

துப்பாக்கி முனையில் இழுத்துச் செல்லப்பட்ட போர் கைதிகள் வட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்து வருவதாக அதிலிருந்து தப்பிய கைதி ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வட கொரிய மனித உரிமைகளுக்கான குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் வட கொரியாவில் இருந்து ரத்த நிலக்கரி ஏற்றுமதி என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வட கொரிய நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்த்த 15 பேரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது.

1953ஆம் கொரிய போர் முடிந்தபோது வட கொரியா பிடித்து வைத்திருந்த சுமார் 50 ஆயிரம் தென்கொரிய போர்க் கைதிகளில், தப்பிய ஒருவர் தனது அனுபங்களை இவ்வாறு பகிர்ந்துக்கொண்டார்.

வேலை செய்யும் முகாம்களுக்கு நாங்கள் இழுத்துச் செல்லப்பட்டபோது, துப்பாக்கிமுனையில், எங்களை வரிசையாக அழைத்துச் சென்றார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய வீரர்கள் இருந்தனர்.

சுமார் 670 போர்க் கைதிகளுடன் வடக்கு ஹாம்ஜியோங் மாகாணத்தில் ஒரு சுரங்கத்தில் நாம் வேலை பார்த்தோம்.

40 ஆண்டுகள் கழித்து தப்பிச் செல்லும் வரை அங்கு தான் நான் வேலை பார்த்தேன்.

அடிமைகளாக இருந்த காலத்தில் திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டோம்.

குறைவான உணவுப் பொருட்களே தந்ததனர். அதில் தான் வாழ்க்கையை நடத்தினோம்.

அந்தப் பிள்ளைகளையும் சுரங்கத்திற்கே அழைத்துச் செல்வதைத் தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை’ என கூறினார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com