கொரோனா தொற்றால் தாதி ஒருவரும் உயிரிழப்பு

இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கொவிட்-19 தொற்றால் தாதியொருவரின் உயிரிழப்பு முதல் தடவையாக பதிவாகியுள்ளது.

மாவனெல்ல ஆதார வைத்தியசாலையிலேயே குறித்த தாதி உயிரிழந்துள்ளார்.

இவர் கண்டி தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கற்றலைப் நிறைவு செய்து 2001 ஆம் ஆண்டுமுதல் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் தாதியாக தனது பணி புரிந்து வந்ததாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.