காதலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்!

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்த அஜிஸ் – அமரீன் தம்பதியினர் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

காய்கறி வியாபாரம் செய்துவரும் அஜிஸ் பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம்.வீட்டில் தனியாக இருந்த அமரீனுக்கு சமூக வலைதள செயலி மூலம் சோலையூர் பகுதியை சேர்ந்த பூபதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

அமரீனுக்கு திருமணம் ஆனது தெரியாமல் பூபதி அவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். கடந்த 20-ம் திகதியன்று அஜிஸ் வெளியூர் சென்றிருந்த போது பூபதியை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார் அமரீன். வீட்டிற்கு சென்ற பின்னர்தான் அமரீனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது பூபதிக்குத் தெரிய வந்துள்ளது.

ஆனாலும், காதலி மேலுள்ள ஆசையால் அவருடன் 2 நாட்கள் வீட்டில் தனியாக இருந்துள்ளார் பூபதி. சம்பவ நாளன்று பொருட்கள் வாங்குவதற்காக அமரீன் வெளியில் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டிலுள்ள மின்விசிறியில் பூபதி தூக்கிட்ட நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், புதுப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த பூபதியின் தந்தை தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திருவண்ணாமலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், பூபதி காதலித்த அமரீனுக்கு திருமணம் ஆனதை அறிந்த விரக்தியில்தான் பூபதி தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

காதலிக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்ததால் காதலன், காதலியின் வீட்டுலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com