இலங்கையின் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்கின்றது – ஐநாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர்

இலங்கையின் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதையிட்டு கனடா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னோவ் தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கனேடிய வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னோவ் , இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உறவினர்களை நினைவுகூர்தல் மற்றும் சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்படுவது போன்ற மனித உரிமை மீறல்களும் சட்டத்தின் ஆட்சியும் சீர்குலைந்துள்ளதாகவும் கனேடிய வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படுதை ஐநா பேரவை உறுதி செய்யவேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com