பேருந்தில் உயிரிழந்த கொரோனா இளைஞன்! அச்சத்தில் மக்கள்

கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞன் ஒருவர் பேருந்தில் பயணித்துக்கொண்டு இருக்கும் போது திடீரென உயிரிழந்துள்ளார்.

கெகிராவை – மரதன்கடவல எவீரவெவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

பேருந்தினுள் குறித்த இளைஞன் மூச்சற்ற நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் உயிரிழந்து காணப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.