ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கம்

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்பட்டு இங்கிலாந்தில் இருந்து வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொவிட் வைரஸ் காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தகக்கது.