அவசர சிகிச்சைப் பிரிவில் 28 கொரோனா நோயாளிகள்! புதிய வைரஸ் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் COVID-19 நோயாளிகள் 28 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.

மேலும் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இருப்பதாகவும், படுக்கைகளுக்கு பஞ்சமில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், நாட்டில் புதிய மாறுபாடு குறித்து டாக்டர் ஹேராத் கூறுகையில்,

புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.

அதேசமயம் அவிசாவளை மற்றும் வவுனியாவில் சமூக மட்டத்தில் ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள பாதிப்புகளால் ஆபத்து எதுவும் இல்லை.

ஆனால், அவிசாவளை மற்றும் வவுனியாவில் காணப்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.