வவுனியாவில் தற்கொலை அங்கிகள் மீட்பு! பொலிஸார் குவிப்பு


வவுனியா – செட்டிகுளம், சின்னத்தம்பனை பகுதியில் காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தற்கொலை அங்கிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு தற்கொலை அங்கிகளும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் கூறினர்.

மேலும் குறித்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், ஒன்றரை கிலோ கிராம் வெடிபொருட்கள் அடங்கிய இரண்டு தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கியில் பொருத்தப்பட்டு இருக்கும் வெடிபொருட்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன.

வெடிபொருட்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்று பொலிஸ் சிறப்பு பணிக்குழு மற்றும் வெடிகுண்டு அகற்றும் பிரிவுக்கு வவுனியா நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.