யாழில் சித்த மருத்துவத் துறை மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி!

சித்த மருத்துவ பட்டதாரி மாணவர்களால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேலையின்மை பிரச்சினை தொடர்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்து போராட்டம், இன்று நண்பகல் 12.30 மணி அளவில் யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெற்றது. சித்தமருத்துவத் துறையில், பட்டப்படிப்பினை முடித்தும், கடந்த நான்கு வருடங்களாக தாம் பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கப்படவில்லைனெத் தெரிவித்துள்ளனர்.

ஆகவே தம்மையும் பட்டதாரிகள் நியமனத்திற்குள் உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணியானது சித்தமருத்துவ பீடத்திலிருந்து சித்த மருத்துவ வைத்தியசாலை வரை இடம்பெற்றது. இதன் படி தமது போராட்டத்திற்கு சித்த மருத்துவ மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்கியிருந்த போதிலும் மாணவர்களை வெளியே விடாது சித்த மருத்துவத்துறை தடுத்து நிறுத்தியதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com