4 கட்டங்களின் கீழ் 42 நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்!

நீதிமன்ற கட்டமைப்பில் டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் 42 நீதிமன்றங்களில் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

4 கட்டங்களின் கீழ் அனைத்து நீதிமன்றங்களும் டிஜிட்டல் மயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

நீதிமன்ற கட்டமைப்பிக்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து மறுசீரமைப்பு அடிப்படை அபிவிருத்தி நன்மைகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வழக்குகள் தாமதமின்றி நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துரிதமாக சேவைகளை வழங்குதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.

அம்பாந்தோட்டை மாவட்ட நீதிமன்றம் மற்றும் தங்காலை நீதிமன்ற கட்டிடங்களில் நடைபெற்ற கலந்துறையாடலில் அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

நீதிமன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளில் சட்டத்தரணிகளின் கருத்துக்களும் முக்கியமானதாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com