இளைய சகோதரனால் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை!

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 16 வயது சகோதரன் தனது 23 வயது சகோதரியை 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகள் சிறுவன் உட்பட 3 பிள்ளைகளையும் தாயாரையும் விட்டுவிட்டு தந்தை விலகிச் சென்றுள்ளார். தாய் 3 பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுவனின் இரண்டாவது சகோதரி கல்முனையில் வீடு ஒன்றில் வீட்டுவேலைக்குச் சென்று வருவதாகவும் சகோதரனும் சகோதரியும் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

குறித்த பெண்ணின் உடல்நிலையில் சந்தேகம் கொண்டு கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருவரையும் இன்று திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்ததுடன் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.