வடமாகாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று; பூநகரி- வலைப்பாட்டில் 10 பேர் அடையாளம்!

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று 379 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும்(5 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள்), மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்குமாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதில் 12 பேர் வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூநகரி – வலைப்பாடு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், மன்னார் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் ஆடை தொழிற்சாலை ஊழியர் எனவும், வவுனியா மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் எனவும் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.