400 ஐ நெருங்கியது கொரோனா உயிரிழப்பு!

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இன்றையதினம் 7 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.