சஜித்துடன் சங்கமிக்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ஸ?

தற்போது ஆளும் தரப்பில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பரபரப்பு தகவலொன்றை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இன்று நாளை அல்ல, எதிர்காலத்தில் அமைச்சர் விமல் தங்களுடன் இணைவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை ஜனாதிபதி கோ்டாபயவுக்கு வழங்கவேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ஸ் தெரிவித்த நிலையில் அது ஆளும் தரப்புக்கிடையே பூதாகார பிரச்சினையாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.