கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சீனா? வெளியானது தகவல்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சீனா உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் தினேஷ்குணவர்தன.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள் வரை பலதரப்பட்டவர்கள் இந்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

சீனாவிற்கு ஆர்ப்பாட்டங்களில் தொடர்பில்லை நான் அவ்வாறு கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் இந்தியாவின் பாரிய திட்டங்களும் பாரிய முதலீடுகளும் தொடரும் என தெரிவித்துள்ள அமைச்சர் கிழக்கு கொள்கலன் முனைய திட்டம் கைவிடப்பட்டுள்ளமை இந்தியா இலங்கைக்கு இடையிலான உறவுகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவானவை பல வருட வரலாற்றை கொண்டவை என தெரிவித்துள்ளார்.