பாண்டியன் ஸ்ரோர்ஸ் சீரியலிலிருந்து குமரன் விலகலா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடரை ஆண்களும் சேர்ந்து பார்க்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையே மக்களிடம் வரவேற்பு பெற காரணமெனலாம்.

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் குமரன் – சித்ரா நடித்து வந்த கதிர் – முல்லை கதாபாத்திரத்தாம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று வேண்டும்.

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா நம்மிடத்தில் இல்லை. இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சீரியலில் புதிய முல்லையாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் வெளியூர் சென்றது போல காண்பித்து வருகின்றனர்.இது சீரியளுக்காக தான் இப்படி என்று பார்த்தால் உண்மையில் நடிகர் குமரனுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அப்பட படப்பிடிப்பிற்காக அவர் பெங்களூர் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

கதிர் சில வாரமாக சிரியலில் தலை காண்பிக்காததால் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று சமூக வலைதளத்தில் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். மேலும், சமீபத்தில் குமரன், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாகவும் பதிவிட்டு இருந்தார்.

அதே போல கதிர் இந்த தொடரில் இருந்து விலகவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த தொடரில் புதிய முல்லையாக நடித்து வரும் காவ்யா பேட்டி ஒன்றில் பேசுகையில் கதிர் – முல்லை இவருக்கான ரோமான்ஸ் காட்சிகள் விரைவில் இடம்பெறும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.