ஏலக்காயின் விலை அதிகரிப்பு!

ஒரு கிலோ ஏலக்காய் விலை ரூ 13,000 வரை அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ஏலக்காய் ரூப.12.000 க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வருடம் (2020ஆம் ஆண்டு) ஒரு மெட்ரிக் டொன்னுக்கும் மேற்பட்ட ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் இதனால் 17 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெறப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடம் தோறும் 32 மெட்ரிக் தொன் ஏலக்காய் பயன்படுத்தப்படுவதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் பீ. ஹீன்கந்தே தெரிவித்துள்ளார்.

மேலும், ஏலக்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கிராமிய மட்டத்தில் திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.